உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் மக்கள் பணிக்காக 100 கோடி நிதி கேட்டு சிவகங்கை சேர்மன் மற்றும் கவுன்சிலர்கள் கோரிக்கை.

உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் மக்கள் பணிக்காக 100 கோடி நிதி கேட்டு சிவகங்கை சேர்மன் மற்றும் கவுன்சிலர்கள் கோரிக்கை.

சிவகங்கை நகராட்சியில் சாதாரண கூட்டம் நகர்மன்றத் தலைவர் சிஎம்.துரை ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 26 நகர் மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்,

கூட்டத்தில் உரையாற்றிய நகர்மன்ற தலைவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பழமை வாய்ந்த மாவட்ட தலைநகரான சிவகங்கைக்கு புதிய நகராட்சி அலுவலகம், குடிநீர், சாலைகள் (பேவர்பிளாக் — சிமெண்ட் காங்கிரீட் — தார் சாலை) மேம்படுத்தவும், பழமை வாய்ந்த தெப்பக்குளத்தை செப்பனிடவும், பாதாள சாக்கடைகள், மின்விளக்குகள், மழைநீர் வடிகால்வாய் போன்றவற்றை மேம்படுத்தும் பணிகளுக்காக ரூபாய் 100 கோடி ஒதுக்குமாறு உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம், மேலும் தொடர்ந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படி நேரடியாக தலைமைச் செயலகம் சென்று உள்ளாட்சித் துறை அமைச்சரிடம் கோரிக்கை மணு அளித்தோம், இந்நிலையில் சட்டமன்றத் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதில் வரவிருக்கும் உள்ளாட்சித் துறை மானிய கோரிக்கையில் நிச்சயம் நமது சிவகங்கை நகராட்சிக்கு 100 கோடிக்கு மேல் நிதி ஒதுக்குவார்கள் என்ற நம்பிக்கையோடு தமிழக முதல்வருக்கும், கூட்டுறவுத்துறை அமைச்சருக்கும், உள்ளாட்சித்துறை அமைச்சருக்கும் அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களும் நன்றி கூறி கூட்டம் இனிதே நிறைவேறியது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்