அரியமங்கலம் குப்பைகிடங்கு காலி செய்யப்பட்ட பின், நிரந்தர மக்கள் பொழுது போக்கு பூங்கா அமைக்க வேண்டும் நுகர்வோர் உரிமை விழிப்புணர்வு இயக்க விழாவில் தீர்மானம்.
அரியமங்கலம் குப்பைகிடங்கு காலி செய்யப்பட்ட பின், நிரந்தர மக்கள் பொழுது போக்கு பூங்கா அமைக்க வேண்டும் நுகர்வோர் உரிமை விழிப்புணர்வு இயக்க விழாவில் தீர்மானம்.
அனைத்திந்திய மக்கள் உரிமை பாதுகாப்பு கழகம் நுகர்வோர் உரிமை விழிப்புணர்வு இயக்கம் சார்பில் உலக மகளிர் தின விழா திருச்சியில் நடைபெற்றது. தேசியத் தலைவர் கார்த்திக் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். தமிழ் மாநில பொதுச் செயலாளர் பி.சுவேந்திரன் முன்னிலை வகித்தார். நிறுவனத் தலைவர் ஜெயராமன் விருதுகள் வழங்கி பேசினார். முடிவில் அமைப்பாளர் ராஜன் நன்றி கூறினார்.
இதில் மாநிலத் தலைவர் சின்ராஜ் மாநில செயலாளர் கருப்பண்ணன்,
சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ஜானகி சங்கர், பேராசிரியர் முருகேஸ்வரி, கவிதா தண்டபாணி, நுகர்வோர் அமைப்பு தலைவர்கள் சிவசங்கர் சேகரன்,பால்குணா லோகநாத் , எழில் ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
திருச்சி மாநகரில் மிகவும் மோசமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும்.போடப்படாத இடங்களில் புதிய சாலைகள் போடப்பட வேண்டும். திருச்சி கீபர் ரோடு வழியாக பீமநகர் மேம்பாலம் வரை இருவழிச் சாலையாக தரம் உயர்த்தி வாகன போக்குவரத்துக்கு அமைத்து தர வேண்டும், திருச்சி மாநகரில் பிரதான போக்குவரத்து சாலைகளில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்கள் நடைபாதை மேடை ஆக்கிரமிப்புகளை அகற்றி நிரந்தரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை காவிரி ஆற்றுப்பாலம் கல்லணை ரோடு சஞ்சீவி நகர் சந்திப்பிலும், திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலை எஸ். ஐ.டி கல்லூரி மற்றும் கல்கண்டார் கோட்டை பஸ் செல்லும் சாலை சந்திப்பிலும் சுரங்கப்பாதைகள் அமைத்திட வேண்டும்.கடந்த 2015 ஆம் ஆண்டு 400 மக்கள் கையெழுத்திட்டு நிரந்தர மக்கள் பொழுதுபோக்கு பூங்கா அமைக்க வேண்டும் என மாநகராட்சியிடம் கோரிக்கை கொடுத்தோம் அந்த கோரிக்கை மனுவின்படி அரியமங்கலம் குப்பை கிடங்கு காலி செய்யப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் நிரந்தர மக்கள் பொழுதுபோக்கு பூங்கா அமைத்திட வேண்டும் அரசு தலைமை மருத்துவமனையில் நுகர்வோர் ஆலோசனைக் குழு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
இந்த மனு தமிழக முதல்வரின் தனி பிரிவு,மாவட்ட கலெக்டர்,மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.