துணை மேயர் திவ்யா தலைமையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.

துணை மேயர் திவ்யா தலைமையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின்படி திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடத்துவதன் தொடர்ச்சியாக திருச்சி கிழக்கு மாநகரத்தில் 47 நிகழ்வுகளின் வரிசையில் முதல் நிகழ்வாக தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

மண்டல குழு தலைவர் ஜெய நிர்மலா வரவேற்புரை ஆற்ற, துணை மேயர் திவ்யா தலைமை தாங்க, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, கிழக்கு மாநகர செயலாளரும் மண்டல குழு தலைவருமான மதிவாணன், ஆகியோர் சீருடை வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்வில் பகுதி கழகச் செயலாளர் ராஜ் முஹம்மத் வட்டக் கழகச் செயலாளர் சேகர் மற்றும் கழக நிர்வாகிகள் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இறுதியாக நன்றியுரை துவரங்குறிச்சி பேரூராட்சி மன்ற தலைவர் சரண்யா. நிகழ்த்தினார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்