வேலைக்கு பெண்கள் தேவை. தென்காசி மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை.

வேலைக்கு பெண்கள் தேவை.

தென்காசி மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை.

தென்காசி மாவட்டம் முழுவதும் வேலைக்கு பெண்கள் தேவை என்று போஸ்டர்  ஒட்டப்பட்டுள்ளது.கு அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருக்கும் போன் நம்பரை தொடர்பு கொண்டால், ஆதார் கார்டு, பான் கார்டு, போட்டோ பயோடேட்டா அனுப்பச் சொல்கிறார்கள். பின்னர் அனுப்பி விட்டு, அவர்களை நாம் போனில் தொடர்பு கொண்டால் போனை எடுப்பது கிடையாது. இதில் ஏதோ விபரிதம்  இருப்பதாக தோன்றுகிறது.

தென்காசி மாவட்ட காவல்துறையினர் இதை உன்னிப்பாக கவனித்து விசாரணை செய்து  மக்களின் அச்சத்தை போக்க வேண்டும், பொதுமக்கள் மற்றும் வேலை தேடும் நபர்கள், இப்படிப்பட்ட முகவரியே இல்லாத மேன்பவர் ஏஜென்சி நிறுவனங்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த நிறுவனத்திடம் விளக்கம் கேட்பதற்காக நாமும் தொடர்பு கொண்டோம் நம் அழைப்பையும் எடுக்கவில்லை.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்