தனியார் மயமாக்குவதை கண்டித்து சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் பிரச்சாரம் திருச்சியில் நடந்தது.
தனியார் மயமாக்குவதை கண்டித்து சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் பிரச்சாரம் திருச்சியில் நடந்தது.
விமானம், கப்பல், நிலக்கரி, சுரங்கம் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும், தமிழ்நாடு மின்வாரியத்தை 3 கம்பெனிகளாக பிரித்து தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும். மின்வாரியத்தில் காலியாக உள்ள 62,000 காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். காண்ட்ராக்ட் ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திருச்சி பெருநகர் வட்டக் கிளை சார்பில் கே.கே நகரில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரத்திற்கு சங்க வட்ட செயலாளர் பழனியாண்டி தலைமை தாங்கினார்.கோரிக்கைகளை விளக்கி சி. ஐ.டி.யூ. மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்டத் துணைத் தலைவர் எஸ்.கே.செல்வராஜ்,
வட்ட தலைவர் நடராஜன், கிழக்கு கோட்டத் தலைவர் மணிகண்டன், கிழக்கு கோட்ட செயலாளர் நாகராஜ், கே.கே.நகர் கிளை செயலாளர் குணசேகரன், மின் துறை பொறியாளர் அமைப்பு துணைத்தலைவர் இருதயராஜ் ஆகியோர் பேசினர்.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கை விளக்க துண்டு பிரசுரம் பொதுமக்களிடம் கொடுக்கப்பட்டது.