பிரேக்’ பிடிக்காததால் தூணில் மோதிய அரசு பஸ் – சிவகங்கை பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் அதிர்ச்சி!
‘பிரேக்’ பிடிக்காததால் தூணில் மோதிய அரசு பஸ் – சிவகங்கை பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் அதிர்ச்சி!
மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து சிவகங்கைக்கு நேற்றிரவு 7.30 மணிக்கு அரசு நகர பேருந்து வந்தது. பேருந்து நிலையத்துக்குள் வந்தபோது பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. ‘பிரேக்’ பிடிக்காத நிலையில் தாறுமாறாக ஓடிய பேருந்து, அங்கிருந்த தூணில் மோதி நின்றது. இதில் பேருந்தின் கண்ணாடிகள் நொறுங்கி கீழே விழுந்தன.
இதை பார்த்த பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் அலறியபடித்தபடி அங்கிருந்து ஓடினர். பேருந்துக்குள் இருந்த பயணிகளும் கூச்ச லிட்டனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமேற்படவில்லை. பின்னர் பேருந்திலிருந்து இறங்கிய பயணிகள், ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்தனர். அவர்களை போலீஸார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.