ஸ்ரீரங்கத்தில் தே.மு.தி.க நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.

ஸ்ரீரங்கத்தில் தே.மு.தி.க நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் திரைப்பட உலகின் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்பட்ட வருமான விஜயகாந்த் அவர்களின் 72வது பிறந்த தினவிழா திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடந்தது.

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் பகுதி 1வது வார்டு மேலூர் சாலை மூலத் தோப்பு பகுதியில் தெற்கு மாவட்டம் சார்பில்   ஸ்ரீரங்கம் பகுதி 1வது வட்டக் கழக செயலாளர் TV சுரேஷ் மணிகண்டன் மற்றும்  வட்ட கழக நிர்வாகிகள் ஏற்பாட்டின் பேரில் நடந்தது.

ஸ்ரீரங்கம் பகுதி கழகச் செயலாளர் திரு R.சக்திவேல் கழக கொடி ஏற்றி அன்னதானம் வழங்கினார். இதில் கழக  இன்நாள் முன்னாள் நிர்வாகிகள் துரை.புகழேந்தி சக்திவேல், சிங்கர் ரவி ரெங்கராஜ்,

ஆட்டோ ரெங்கன், வடமலை,

ஜனதா ரவிச்சந்திரன்,  EB பாஸ்கர்

தங்கதுரை, அன்பழகன்,

பீட்டர், சசிகுமார், முருகன்

மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில்  பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மலர் அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியின் ஸ்ரீரங்கம் பகுதி 1வது வட்ட கழக தேசிய முற்போர்க்கு திராவிட  கழகத்தின் நிர்வாகிகளும் தொண்டர்களும் திறம்பட ஏற்பாடு செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்