சாயல்குடி பேரூராட்சி செயல் அலுவலர் தற்காலிக பணி நீக்கம். கலெக்டர் அதிரடி உத்தரவு.

 

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி சந்தையில் கருவாடு விற்ற, ஊனமுற்ற பெண்ணின் கருவாடுகளை இழுத்து கீழே வீசியதோடு கால்களால் எட்டி உதைத்து அநாகரிக செயலில் ஈடுபட்ட பேரூராட்சி செயல் அலுவலர் மீது இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க  சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை வைத்த நிலையில்,

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன், இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-

மா.சேகர்

இராமநாதபுரம் மாவட்டம்,சாயல்குடி பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் மாற்றுத்திறனாளி வியாபாரியிடம் பேரூராட்சி செயல் அலுவலர் சேகர் கண்ணியக்குறைவான முறையில் நடந்து கொண்டதாக வந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிற்க்கிணங்க இன்று சாயல்குடி பேரூராட்சி செயல் அலுவலர் மா.சேகரை தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுகிறார் என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்