காலி குடங்களுடன் கிராமத்தினர் முற்றுகை. போலிசார் பேச்சுவார்த்தை.

காலி குடங்களுடன் கிராமத்தினர் முற்றுகை. போலிசார் பேச்சுவார்த்தை.

குடிநீர் பிரச்னைக்காக  திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை ஜி.குரும்பபட்டி கிராமத்தினர் காலி குடங்களுடன் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

மோர்பட்டி ஊராட்சி ஜி. குரும்பபட்டியில் 60 ஆயிரம் லிட்டர் மேல்நிலைத் நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளாகியும் இத்தொட்டிக்கு காவிரி நீர் வருவதில்லை. உள்ளூர் ஆழ்துளை கிணறுகளில் இருந்து நீர் எடுத்து வினியோகம் நடந்தது. இதுவும் பழுதானக 20 நாட்களாக குடிநீர் சப்ளை இல்லை.

அதிருப்தியில் இருந்த கிராமத்தினர் நேற்று காலி குடங்களுடன் வேனில் வடமதுரை பஸ் ஸ்டாப் வந்து, அங்கிருந்து ஊர்வலமாக ஒன்றிய அலுவலகம் சென்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.

பேச்சுவார்த்தை நடத்திய வடமதுரை எஸ்.ஐ., சித்திக் தலைமையிலான போலீசார் குடிநீர் பிரச்னை தீர நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூற கலைந்து சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்