குலதெய்வ வழிபாட்டிற்காக,  இரட்டை மாடு கட்டி மாட்டு வண்டியில் 72 கிலோ மீட்டர்  பயணம் செய்த சிவகங்கை நாட்டார்கள்.

குலதெய்வ வழிபாட்டிற்காக,  இரட்டை மாடு கட்டி மாட்டு வண்டியில் 72 கிலோ மீட்டர்  பயணம் செய்த சிவகங்கை நாட்டார்கள்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூர் வேலங்குடி பகுதி நாட்டார்கள் குலதெய்வ வழிபாட்டிற்காக பாரம்பரிய கூட்டு வண்டி பயணம் மேற்கொண்டனர்.

கோட்டையூரில் உள்ள வேலங்குடி மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த நாட்டார்கள் குலதெய்வ வழிபாட்டிற்காக ஆண்டுதோறும் பாரம்பரிய முறையில் மாட்டு வண்டிகளில் மதுரை மாவட்டம் அழகர் கோயிலுக்கு பயணம் மேற்கொள்வர். இக் கோயிலில் ஆடித் திருவிழா தொடங்கியதும் வேலங்குடி கிராமத்திற்கு கோயிலில் இருந்து திருஓலை அனுப்பப்படுகிறது.

ஓலை வந்ததும், பாரம்பரிய பயணத்திற்கு இரட்டை மாட்டு கூட்டு வண்டிகளை அப்பகுதி மக்கள் தயார் செய்வர். இந்த ஆண்டு 19 இரட்டை மாட்டு வண்டிகளில் பாரம்பரிய பயணத்தை தொடங்கினர். குன்றக்குடி, திருப்புத்துார், எஸ். எஸ். கோட்டை, மேலுார் வழியாக 72 கி.மீ., தங்கள் பயணத்தை மேற்கொண்டு அழகர் கோயிலை சென்றடைவர்.

அங்கு தீர்த்தமாடுதல் , கிடா வெட்டு, அன்னதானம் நடைபெறும். நாளை நடக்கும் தேரோட்ட நிகழ்ச்சிக்கு பிறகு அழகர் கோயிலில் இருந்து மாட்டு வண்டியில் சொந்த ஊர் திரும்புவர். பாரம்பரிய குலதெய்வ வழிபாட்டு நிகழ்ச்சியில் உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பலர் கலந்து கொள்வர்.

இதன் மூலம் கிராமத்தில் ஒற்றுமை மற்றும் உறவுகள் பலமாவதோடு பாரம்பரியமும் காக்கப்படுவதாக பெருமிதத்தோடு தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்