சிவகங்கை அருகே அய்யனார் கோயில் திருவிழாவையொட்டி நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 13 பேர் காயமடைந்தனர்.

சிவகங்கை அருகே அய்யனார் கோயில் திருவிழாவையொட்டி நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 13 பேர் காயமடைந்தனர்.

சிவகங்கை அருகே புதுப்பட்டியில் அய்யனார் கோயில் திருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 650 காளைகள் பங்கேற்றன. 375 வீரர்களும் கலந்து கொண்டனர்.

வாடிவாசலில் இருந்து நாலுகால் பாய்ச்சலில் வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் வீரர்களுக்கு பிடி கொடுக்காமல் பாய்ந்தோடி சென்றன. வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்களுக்கு கட்டில், பீரோ, டிரஸ்சிங் டேபிள், டைனிங் டேபிள், சைக்கிள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் 13 பேர் காயமடைந்தனர். இதில் 3 பேர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

போட்டியினை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கண்டு களித்தனர். இதேபோல் சிவகங்கை அருகே மதகுபட்டியில் பூங்குன்ற அய்யனார் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 200 காளைகள் பங்கேற்றன. 100 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் காளைகள் முட்டி 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில், பெரும்பாலான காளைகள் நின்று விளையாடி, மாடுபிடி வீரர்களை துாக்கி வீசியது. சில காளைகள் வீரர்களிடம் பிடிபட்டது. கீழப்பூங்குடி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் பிரேம்குமார், சைலேஷ் பாபு தலைமையில் காயமுற்ற வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காளைகள் முட்டியதில் மாடு பிடி வீரர் மதுரை கருமாத்துார் கார்த்திக் 22, திண்டுக்கல் வெயிலடுச்சான்பட்டி முகில்வண்ணன் 28, திண்டுக்கல் அய்யம்பாளையம் சிவமணி 25 உட்பட 29 பேர் காயமுற்றனர். பலத்த காயமுற்ற 2 பேர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். மதகுபட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்