கருவந்தாவில் மேலும் ஒரு அங்கன்வாடி மையம் அமைக்க அமைச்சர் கீதா ஜீவனிடம் முன்னாள் தென்காசி திமுக மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் கோரிக்கை..
கருவந்தாவில் மேலும் ஒரு அங்கன்வாடி மையம் அமைக்க அமைச்சர் கீதா ஜீவனிடம் முன்னாள் தென்காசி திமுக மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் கோரிக்கை.
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் கருவந்தா ஒன்றிய கவுன்சிலர் பால் துறை என்பவர், கருவந்தா கிராமத்தில் ஏற்கனவே ஒரு அங்கன்வாடி இயங்கி வருகிறது, அந்த அங்கன்வாடியில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகிறார்கள், இதனால் அங்கு வருகிற குழந்தைகளை பராமரிக்க முடியாத நிலை அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஏற்படுகிறது.
ஆகையால், கருவந்தா கிராமம் மூன்றாவது வார்டில் கூடுதலாக ஒரு அங்கன்வாடி அல்லது மினி அங்கன்வாடி அமைத்திட வேண்டும் என்கிற கோரிக்கை மனுவை முன்னாள் தென்காசி திமுக மாவட்ட செயலாளரிடம் வழங்கியிருந்தார். அந்த மனுவை அமைச்சர் கீதா ஜீவன் அவர்களிடம் நேற்று வழஙகியுள்ளார் சிவ பத்மநாதன்.
அமைச்சர் அவர்களும் மனு சம்பந்தமாக மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அவர்களிடம் இது குறித்து கூடுதல் அங்கன்வாடி அமைக்க நடவடிக்கை எடுக்க சொன்னதாக சொல்லியிருக்கிறார்.