திருச்சி மேலகல்கண்டார் கோட்டையில் பொன்மலை பகுதி திமுக சார்பில் நீர் மோர் பந்தல். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திறந்து வைத்தார்.
திருச்சி மேலகல்கண்டார் கோட்டையில் பொன்மலை பகுதி திமுக சார்பில் நீர் மோர் பந்தல். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திறந்து வைத்தார்.
திருச்சி மேலகல்கண்டார்கோட்டை திரு.வி.க திடல் அருகில் பொன்மலை பகுதி திமுக சார்பாக அன்பில் பொய்யாமொழியின் பிறந்தநாள் நினைவு கோடைகால நீர்மோர் பந்தல்திறப்பு விழா பகுதி செயலாளரும், கவுன்சிலருமான கொட்டப்பட்டு இ.எம்.தர்மராஜ் தலைமையில் இன்று நடந்தது.
நிகழ்ச்சியில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், தர்ப்பூசணி வழங்கினார். நிகழ்வுக்கு திருச்சி கிழக்கு மாநகர செயலாளர் மு.மதிவாணன் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் பொன்மலை பகுதிக்கு உட்பட்ட அனைத்து வட்டச் செயலாளர்கள், வட்ட நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள்,பகுதி நிர்வாகிகள், மாவட்ட மாநகர நிர்வாகிகள் அனைத்து அணிகளின் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக முன்னோடிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.