திருச்சி அருணாச்சலம் மன்றத்தில் மாவட்ட மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம். மாநில தலைவர் ஹசீனா சையத் பங்கேற்பு.
திருச்சி அருணாச்சலம் மன்றத்தில் மாவட்ட மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம். மாநில தலைவர் ஹசீனா சையத் பங்கேற்பு.
திருச்சி மாவட்ட மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி ஷூலா செலஸ் தலைமையில் அருணாச்சலம் மன்றத்தில் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில மகிலா காங்கிரஸ் தலைவி ஹசீனா சையத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், முன்னாள் அமைச்சர் எச்.டி.ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி., மீதான பாலியல் புகார் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக்-அவுட்நோட்டீஸ்
பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நெல்லையில் நடந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலையில் குற்றவாளிகளை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் திருச்சி மாவட்ட மகளிர் அணி துணை தலைவிகள் கோகிலா, மாரீஸ்வரி,தெற்கு மாவட்ட தலைவி கமலா கோவிந்தராஜ்,மாநில நிர்வாகிகள் வக்கீல் மோகனாம்பாள் ஜெகதீஸ்வரி மற்றும் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர் .