போலீஸார் பிடித்துச்சென்ற நபர் குறித்த விவரம் தெரியவில்லை . உறவினர்கள் ஆட்சியர் இல்லத்தை முற்றுகையிட்டு இரவில் போராட்டம்.

போலீஸார் பிடித்துச்சென்ற நபர் குறித்த விவரம் தெரியவில்லை .
உறவினர்கள் ஆட்சியர் இல்லத்தை முற்றுகையிட்டு இரவில் போராட்டம்.

திருச்சி மாவட்டம் குழுமணி அருகேயுள்ள கோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஏ. நாகராஜ் (28). இவர் மீது திருச்சி மாவட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இவரை கடந்த இரு நாள்களுக்கு முன்பு திருச்சி மாவட்ட தனிப்படை போலீஸôர் விசாரணைக்காக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் இரு நாள்களாகியும் அவரை எங்கு வைத்துள்ளனர் என்ற விவரம் உறவினர்களுக்கு தெரியவில்லை. இது குறித்து அவரது மனைவி ஹேமா மற்றும் குடும்பத்தினர் காவல் நிலையங்களில் விசாரித்தும் பயனில்லை.

இதனையடுத்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட சுமார் 50 பேர், திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியரின் இல்லத்தை புதன்கிழமை இரவு முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டனர். தகவலறிந்து நிகழ்விடம் வந்த கே.கே நகர் போலீஸôரிடம், நாகராஜ் குறித்த விவரங்கள் தெரியும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்து போராட்டத்தை இரவு 10 மணி வரை தொடர்ந்தனர். தொடர்ந்து சாலையிலும் அமர்ந்து சாலை மறியல் போராட்டமும் மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்