துறையூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படும். அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரம்.
துறையூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படும். அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரம்.
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே என் நேரு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். துறையூரில் திமுக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். துறையூர் பெருமாள் மலை அடிவாரத்தில் பிரச்சாரத்தை தொடங்கி வைத்த அமைச்சர் கே.என்.நேரு பேசும்பொழுது, துறையூர் பகுதிகளுக்கு புதிய கலை அறிவியல் கல்லூரி அமைக்கவும் தொழிற்சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. துறையூர் பகுதி மக்களுக்காக மட்டும் தனியாக காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு நடைமுறையில் இரண்டு, மூன்று மாதங்களுக்குள் வந்து விடும் . உப்பிலியபுரம் பகுதியில் உள்ள மக்களுக்காக புளியஞ்சோலையில் கிணறு வெட்டி தனியாக குடிநீர் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறி திமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். நிகழ்ச்சியில் முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின் குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன், நகரச் செயலாளர் மெடிக்கல் முரளி, நகர் மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், துறையூர் ஒன்றிய குழு தலைவர் சரண்யா மோகன் தாஸ், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, சிவ சரவணன், வீரபத்திரன் மாவட்ட அரசு ஆதிதிராவிட நலகுழு தலைவர் மகாலிங்கம் நகர துணை செயலாளர்கள் இளங்கோவன் பிரபு,மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
துறையூர் ஒன்றிய பகுதியான பெருமாள் மலை அடிவாரத்தில் திமுக அரசின் சாதனைகளை கூறியும்,இந்தப் பகுதியில் தொழிற்சாலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி திமுக வேட்பாளர் அருண் நேரு மக்களிடையே வாக்கு சேகரித்தார். பின்னர் கிழக்கு வாடி, நாகலாபுரம், குன்னு பட்டி ,புளியம்பட்டி, நடுவலூர் முத்தியம்பாளையம்,சொரத்தூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து பச்சைமலை பகுதியான வண்ணாடு, கோம்பை ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.சென்ற இடமெல்லாம் பொதுமக்கள் திமுக வேட்பாளர் அருண் நேருவுக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.