கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்  குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளியை தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கைது செய்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறை.  பொதுமக்கள் பாராட்டு.

கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்  குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளியை தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கைது செய்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறை.  பொதுமக்கள் பாராட்டு.

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பேருந்துகளில் நடந்த பல்வேறு நகை திருட்டு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் மனோகர் இ.கா.ப அறிவுறுத்தலின்படி பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவியின் வழிகாட்டுதலின்படி பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர்

பழனிச்சாமி மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் கருணாகரன் உதவி ஆய்வாளர் சரவணன் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சங்கர், ஆரோக்கியராஜ் தலைமைக் காவலர் அலெக்ஸ் முதல் நிலைக் காவலர் கிருஷ்ணகுமார் ஆகியோர்களைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு நகர மற்றும் விரைவு பேருந்துகளில் தொடர்ச்சியாக சோதனை செய்தும் திருட்டு குற்ற சம்பவங்கள் தொடர்பாக கண்காணிப்பு கேமராக்களை தொடர்ச்சியாக ஆய்வு செய்ததில் இருந்தும் இந்ந தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது 4 பேர் கொண்ட கும்பல் என்பது தெரியவரவே, அவர்களை பிடிப்பதற்காக பல்வேறுகட்ட நடவடிக்கைகள் எடுத்தார்கள்.

இந்த நிலையில் தான் திருட்டு கும்பலின் தலைவராக செயல்பட்ட சிவகங்கை மாவட்டம் சிங்கம்புனரி வட்டம் பொன்னடம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்லையா மகன் கார்த்திக்கை கைது செய்து அவனிடம் நடத்திய  விசாரணையில் அவனிடமிருந்து. சுமார் 67 சவரன் நகைகள் மீட்கப்பட்டு மேற்படி நகைகளை நீதிமன்றம் மூலம் உரிய நபர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

மேலும் மற்ற குற்றவாளிகளை கைது செய்ய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேற்கண்ட குற்றவாளியை பிடித்த பெரம்பலூர் நகர காவல் ஆய்வாளர்  கருணாகரன் தலைமையிலான தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்கள். போலிசாரின் இந்த செயலை பொது மக்களும் பாராட்டி வருகிறார்கள்.

 

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்