போர்க்கால நடவடிக்கை துறையூர் நகர அதிமுக கழக செயலாளர் கோரிக்கை.
துறையூர் நகரத்தின் சாபக்கேடு, நகர வாழ் மக்கள் சுகாதாரத்தின் புதைக்குழி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ,போபால் விஷவாயு போன்று, பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடிய அபாயகரமான கொசு உற்பத்தி தொழிற்சாலை எது தெரியுமா? துறையூர் நகரத்தின் மையப்பகுதியில், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை, போதாக்குறைக்கு நகராட்சி சுகாதாரத்துறை என இத்தனை துறை அதிகாரிகளின் பார்வைக்கும், கவனத்திற்கும் எட்டாமல் உள்ள அவமானகரமான, ஏன் அபாயகரமான சின்ன ஏரி தான், மேலே சொன்ன,மக்கள் உயிருக்கு உலை வைத்த தொழிற்சாலைகளின் உதாரணம். கங்கையும் ஒரு நாள் வற்றும்!ஆனால் இந்த சின்ன ஏரி மட்டும் வற்றவே வற்றாது!
ஆனால் இந்த சின்ன ஏரியால் மக்கள் மட்டும், பெரும் துயரத்துக்கு ஆளாகி, துன்பத்திற்கு ஆளாகி,பெருந்தொற்று நோய்க்கு ஆளாகி, அவர்களுடைய கண்ணீர் வற்றி போகும் நிலை வேண்டுமானால் வரும்!
தமிழக முழுவதும் பொதுமக்களுக்கு வைரஸ் காய்ச்சல் தொற்று மிக வேகமாக பரவி வரும் இந்த காலகட்டத்திலாவது பொதுப்பணித்துறை அதிகாரிகள், சின்ன ஏரி சாக்கடை கழிவுநீரை மதகு வழியாகவோ அல்லது கடைக்கால் வழியாகவோ வெளியேற்றுவதற்கு போர்க்கால நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சார்பாக வேண்டுகிறேன். சாக்கடையில் நீர் வெளியேறாததால் நீர்வரத்து வாய்க்கால்களில் கழிவு நீர் அப்படியே தேங்கியுள்ளது.அங்கே கொசு உற்பத்தி அதிகமாகி, பொதுமக்களுக்கு நோய் தொற்று அதிக அளவில் பரவுகிறது.எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதையே புகார் மனுவாக கருதி உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிமுக துறையூர் நகர கழக செயலாளர் அமைதி பாலு