2026-ல் தமிழகத்தில் திராவிட கட்சிகள் இல்லாத ஆட்சி. திருச்சியில் நடந்த ஐ.ஜே.கே மாநாட்டில் அண்ணாமலை பேச்சு.

சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்க முடியாமல் திணறும் திமுக:

2026-ல் தமிழகத்தில் திராவிட கட்சிகள் இல்லாத ஆட்சி.

திருச்சியில் நடந்த ஐ.ஜே.கே மாநாட்டில் அண்ணாமலை பேச்சு.

திருச்சி அருகே சிறுகனூரில், இந்திய ஜனநாயகக் கட்சி (ஐஜேகே) சார்பில், தேசம் காப்போம்}தமிழை வளர்ப்போம் என்றற தலைப்பிலான மாநில மாநாடு சனிக்கிழமை நடைபெற்றறது.

மாநாட்டில் சிறறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை பேசியதாவது:-

ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாகட்டும், தமிழ் மொழியை உலகம் முழுவதும் எடுத்துச் செல்வதாகட்டும், பத்தாண்டு காலமாக நம்முடைய தமிழ்க் கலாசாரத்தின்
மாண்பையும் பெருமையையும் இந்திய மக்களும், உலக மக்களும் கண்டு வருகின்றறனர். இதற்கு பிரதமர் நரேந்திர மோடியே காரணம்.
2026 பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் இல்லாத ஆட்சி மலரும். அப்போது, தமிழ்க் கலாசாரத்தின் தொன்மை புரிந்து கொள்ளப்படும்.
தமிழக எம்.பி.க்களில் பெரம்பலூர் தொகுதி எம்.பி டி.ஆர். பாரிவேந்தர் மட்டுமே தனது கடமையை சிறறப்பாக செய்திருக்கிறறார். பெரம்பலூர் தொகுதியில் ரயில் போக்குவரத்தை ஏற்படுத்துவது பாரிவேந்தரின் முக்கிய திட்டங்களில் ஒன்று. அத் திட்டத்தை ரயில்வே நிதி நிலை அறிக்கையில் இடம்பெறச் செய்துள்ளார். அடுத்து வரும் பாஜக ஆட்சியில் இத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அத்திட்டத்தை அவரே தொடங்கி வைப்பார். அவரை மீண்டும் வெற்றி பெறறச் செய்வது பெரம்பலூர் தொகுதி மக்களின் தலையாயக் கடமையாகும் .

பிய்ந்துபோன காலணி

திமுக செய்த சாதனைகளை சொல்லி வாக்கு கேட்க முடியாமல் தொடர்ந்து திணறி வருகிறது. சாதனைகளை வாக்குகளாக மாற்ற திமுகவுக்கு பயம். இதனால்தான் தற்போது வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற கோஷத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார்.
இந்த கோஷம் அண்ணா காலத்திலேயே எழுந்த கோஷம். அதாவது பழைய பிய்ந்து போன செருப்பு போன்றது. இந்த செறுப்பு காலை கடிக்க மட்டுமே செய்யும் என்பதை உணர்ந்துதான் இந்த கோஷத்தை அப்போதே தூக்கி எறிந்து விட்டனர். இது கூட தெரியாமல் தமிழக முதல்வர் தற்போது இந்த கோஷத்தை கையில் எடுத்துள்ளார்.எல்லாவற்றிற்கும் இந்த தேர்தலில் மக்கள் நிச்சயம் விடை கொடுப்பார்கள்.

இவ்வாறு அண்ணாமலை பேசினார்

தமிழகத்தில் ஊழல் ஆட்சி:

முன்னதாக மாநாட்டில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து ஐஜேகே நிறுவனர் டி.ஆர். பாரிவேந்தர் பேசியதாவது:- நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவார். தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறறது. இது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய கேடு. மத்திய அரசை ஒன்றிய அரசு என்று உச்சரிக்கும் இவர்கள், இந்திய மக்களிடையே பிரிவினைவாதத்தை தூண்டவே இதுபோன்றற செயல்களில் ஈடுபட்டு வருகின்றறனர். இதை வரவுள்ள மக்களவைத் தேர்தலில் மக்கள் புரிந்து கொண்டு வாக்களிப்பார்கள் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்