கொடைக்கானலில் கண்துடைப்பிற்காக நடத்தப்படுகிறதா பறவைகள் கணக்கெடுக்கும் பணி.
கொடைக்கானலில் கண்துடைப்பிற்காக நடத்தப்படுகிறதா பறவைகள் கணக்கெடுக்கும் பணி.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், பெரும்பாலான இடங்கள் வனத்துறையின் கட்டுப்பாட்டிலும், வனப்பகுதியாகவும் இருந்து வருகின்றது. இங்கு பல்வேறு வனவிலங்குகள் மட்டுமின்றி பறவை இனங்களும் வசித்து வருகின்றன. மேலும், கால நிலைக்கு ஏற்ப பல்வேறு பறவைகள் இங்கு வந்து செல்லும்.
இதில் குறிப்பாக, கிரே ஹெட்டட் கென்னறி பிளே கேட்சிங், பிளாக் அண்ட் ஆரஞ்சு பிளை கேட்சிங், யுரேசியன் பிளாக் பேர், சுமிட்டர் வாபுலர், நீலகிரிஃபிளை கேட்ச்சர், ஓரியண்டல் ஒயிட் ஐ, பழனி லாபிங் திரஸ், பார்விங் பிளை கேட்ச்சர், ஸ்டிக்கில்டு புளு பிளை கேட்ச்சர், ரஸ்டி டைல்டு பிளை கேட்சர் உள்ளிட்ட பல்வேறு பறவைகள் உள்ளன.
இந்த சூழலில், கொடைக்கானலில் வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் பறவைகள் கணக்கெடுப்பானது நடைபெறும். ஆனால் இங்கு பறவைகள் கணக்கெடுப்பானது முறையாக நடைபெறுவது இல்லை. என பறவைகள் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடாத நிலையில்,
இப்போது மீண்டும் கொடைக்கானல் வனக்கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் நீா்ப் பறவைகளை கணக்கெடுக்கும் பணி
பேரிஜம், மன்னவனூா், பூம்பாறை நீா்தேக்கங்கள், தேவதானப்பட்டி, பழனி ஆகியப் பகுதிகளிள் கடந்த திங்கள் கிழமை முதல் துவக்கியுள்ளனர்.
தன்னாா்வலா்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோா் 3 குழுக்களாக பிரிந்து கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்தப் நீா்ப் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்தவுடன் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என கொடைக்கானல் வனச் சரகா் சிவக்குமாா் தெரிவித்துள்ளார்.
ஆனால் பறவைகள் ஆர்வலர்களோ மீண்டும் தற்போது பறவைகள் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வருவது, கண்துடைப்பாக இருந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், கொடைக்கானலில் யானை, காட்டெருமை, சிறுத்தை, மான், வரையாடு, குரங்குகள், புலி உள்ளிட்ட விலங்குகள் இருந்து வரும் நிலையில், வனவிலங்குகள் கணக்கெடுப்பும் முறையாக நடத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது. எனவே, பறவைகள் மற்றும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு முறையாக நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.