கேரளாவில் பா.ஜ.க. மாநில செயலாளர் ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் பா.ஜ.க. மாநில செயலாளர் ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை  விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021,டிசம்பர் 19ம் தேதியன்று  கேரள பாஜகவின் இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கான பிரிவின் மாநிலச் செயலாளரும், வழக்கறிஞருமான, ஆலப்புழாவை சேர்ந்த ரஞ்சித் சீனிவாசனை வீட்டில் நுழைந்த சிலர் படுகொலை செய்தனர்.

ரஞ்சித் சீனிவாசன் மனைவி, குழந்தைகள் முன் அவர் படுகொலை செய்யப்பட்டது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 15 பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு ஆலப்புழாவில் உள்ள மாவேலிக்கரா மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் (Additional Sessions Court Mavelikara) விசாரணைக்கு வந்தது.அதன்படி, ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில் 12 பேர் நேரடியாக தொடர்பு இருப்பது நிரூப்பிக்கப்பட்டுள்ளது.

மூன்று பேர் கொலைக்கு உதவியாக இருந்ததும் தெரியவந்தது.

இதன் அடிப்படையில், நைசாம், அஹ்மல், அனூப், முகம்மது அஸ்லாம், சலாம் போனாட், அப்துல் கலாம், சஃப்ரூதீன், முன்ஷாட், ஜசீப் ராஜா, நவாஸ், ஷீமீர், நாசீர், ஜாஹீர் உசைன், ஷாஜி பூவத்துங்கள், சம்னாஸ் அஸ்ரஃப் ஆகிய 15 பேருக்கும் மரண தண்டனை வழங்கி உத்தவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 15 பேரும் தடைசெய்யப்பட்ட  இஸ்லாமிய மத பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்