நெல்லை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளராக விஜாயபதி ஏ.ஆர்.ரகுமான் நியமனம். நிர்வாகிகள் வாழ்த்து.

நெல்லை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளராக விஜாயபதி ஏ.ஆர்.ரகுமான் நியமனம். நிர்வாகிகள் வாழ்த்து.

நெல்லை கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் வர்த்தக அணி அமைப்பாளராக ராதாபுரம் சட்டமன்ற தொகுதி விஜயாபதியை  சார்ந்த ஏ ஆர் ரகுமான் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழிலதிபரான இவர் ராதாபுரம் தொகுதி மக்களுக்கு மருத்துவ உதவி, கல்வி கட்டண உதவி, மற்றும் மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற என்னற்ற இடங்களில் போர் போட்டு கொடுத்தது. மற்றும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ விழாக்களில் பிரம்மாண்ட அளவில் அன்னதானங்கள் செய்தது என்று அனைத்து சமுதாய மக்களுக்கும் அளப்பறிய சமுதாய சேவைகளை கட்சி சார்ந்து செய்து வருவது. அந்த பகுதி மக்களை பிரமிக்க வைக்கிறது.

இந்த நிலையில் தான் இவருடைய கட்சி சார்ந்த சேவைகளை கண்டும், கட்சி நிகழ்வுகள் அனைத்திலும் தவறாமல் கலந்து கொண்டு வருவதை கண்டும் நெல்லை கிழக்கு  மாவட்ட கழக நிர்வாகிகள், மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர் ஒப்புதலோடு வர்த்தக அணி அமைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நெல்லை கிழக்கு மாவட்ட வர்த்தக அணியை சார்ந்த நிர்வாகிகள் அவருக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு திராவிட முன்னேற்றக் கழகத்தின் வர்த்தக அணி செயலாளர் காசி முத்துமாணிக்கம் அறிவித்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்