பெண் கைதி தப்பி ஓட்டம். புழல் சிறை வார்டன்கள் இருவர் சஸ்பெண்ட்.
பெண் கைதி தப்பி ஓட்டம். புழல் சிறை வார்டன்கள் இருவர் சஸ்பெண்ட்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெங்களூருவை சேர்ந்த கைதி ஜெயந்தி தப்பிச் சென்றுள்ளார்.
கைதிகளுக்கு வழங்கப்படும் வழக்கமான பணிக்கு பின் கணக்கெடுக்கும்போது கைதி தப்பிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து பெண் கைதி ஜெயந்தியை பிடிப்பதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஒரு தனிப்படை போலீசார் கர்நாடக மாநிலம் சென்றுள்ளனர்.
மற்றொரு தனிப்படை போலீசார் சிறையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 2 வார்டன்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.