சண்டிகரில் மேயர் தேர்தலில் “இந்தியா” கூட்டணியின் வேட்பாளர் பெற்ற 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் பதட்டம் நிலவுகிறது.
சண்டிகரில் மேயர் தேர்தலில் “இந்தியா” கூட்டணியின் வேட்பாளர் பெற்ற 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் பதட்டம் நிலவுகிறது.
பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் தலைநகராக இருப்பது சண்டிகர். இது யூனியன் பிரதேசமுமாகும். சண்டிகர் மாநகரத்தின் மேயர், துணை மேயர் தேர்தலை “இந்தியா” கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்தே எதிர்கொண்டன. பாஜகவும் வேட்பாளரை நிறுத்தியது. இயல்பாகவே “இந்தியா” கூட்டணியே வெல்லும் வாய்ப்பு இருந்தது. ஆனால் சண்டிகர் மேயர் தேர்தல் ஒத்திவைக்கப்பட பெரும் சர்ச்சையானது. இது தொடர்பாக நீதிமன்ற படிகளேறியது “இந்தியா” கூட்டணி. இதனையடுத்தே இன்று சண்டிகர் மேயர் தேர்தல் நடைபெற்றது.”
இந்தியா” கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி கட்சியின் குல்தீப், பாஜக சார்பில் மனோஜ் சோங்கர் போட்டியிட்டனர். மேயர் தேர்தலில் “இந்தியா” கூட்டணிக்கு 20 வாக்குகளும் பாஜகவுக்கு 16 வாக்குகளும் கிடைத்தன. ஆனால் திடீரென “இந்தியா” கூட்டணிக்கு கிடைத்த 20 வாக்குகளில் 8 செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. இதனால் பாஜக வேட்பாளர் மனோஜ் சோங்கர் வெற்றி பெற்றார் என தேர்தல் அதிகாரி அறிவித்தார். ஆனால் “இந்தியா” கூட்டணி வேட்பாளர் திட்டமிட்டே தோற்கடிக்கப்பட்டார் என ஆம் ஆத்மி , காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் துணை மேயர் தேர்தலில் வாக்களிக்க முடியாது எனவும் இரு கட்சிகளும் தெரிவித்துள்ளன. இதனால் சண்டிகரில் பதற்றம் நிலவுகிறது.