5 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: 70 வயது முதியவருக்கு 10 ஆண்டு சிறை.

5 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: 70 வயது முதியவருக்கு 10 ஆண்டு சிறை.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 5 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 70 வயது முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குடியாத்தம் அருகே சேத்துவண்டை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (70), கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமிக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கு வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், விசாரணையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குற்றவாளி சுப்பிரமணிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

தீர்ப்பைத் தொடர்ந்து, சுப்பிரமணியை போலீசார் பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்