பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியருக்கு விருது.

பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியருக்கு விருது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளித் தலைமையாசிரியா் மைக்கேல்ராஜூக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் திருச்சியில் நடைபெற்ற விழாவில் பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இந்த விருதை வழங்கினார். மேலும் இப் பள்ளிக்கு ஊக்கத் தொகையாக ரூ.10 லட்சமும் வழங்கப்பட்டது.

இவா் ஏற்கெனவே டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, சிறந்த பள்ளிக்கான விருது, சிறந்த பள்ளி மேலாண்மைக் குழுவிற்கான விருது போன்ற விருதுகளைப் பெற்றுள்ளாா்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்