பத்திரிக்கையாளர் சகோதரர்கள், நண்பர்கள், அனைவருக்கும் பந்தல் ராஜாவின் அழைப்பு. வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் கண்டன ஆர்ப்பாட்டம்.

பத்திரிக்கையாளர் சகோதரர்கள், நண்பர்கள், அனைவருக்கும் பந்தல் ராஜாவின் அழைப்பு.

வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் கண்டன ஆர்ப்பாட்டம்.

கப்பலோட்டிய தமிழர், செக்கிழுத்த செம்மல், தேசிய தலைவர் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களை இழிவுபடுத்தி பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர்,மாநிலத் துணைப் பொதுச் செயலாளர், பேச்சாளர் 2ஜி ராசா மீதும், தொடர்ந்து சர்ச்சை பேச்சுகளை பேசி வரும் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் திமுகவை கண்டிக்கும் விதமாக திருநெல்வேலி பாளையங்கோட்டை வ.உ.சி திடலில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் திருஉருவ சிலை முன்பு வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.

நாளை காலை சரியாக 10:30 மணி அளவில். உண்மையை உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கின்ற மாவட்ட பத்திரிக்கையாளர் நண்பர்கள் அனைவரையும் வருகை புரிந்து திமுகவிற்கு வெள்ளாள முன்னேற்ற கழகம் சார்பாக கொடுக்கின்ற கண்டனத்தையும், திமுக கட்சியின் மீது வெள்ளாளர் சமுதாயத்தின் ஏற்பட்டுள்ள கோபத்தையும் செய்தியாக வெளிப்படுத்த வெள்ளாள முன்னேற்றக் கழகம் சார்பாக வேண்டுகோள் வைக்கிறேன் என்றிருக்கிறார் பந்தல் ராஜா.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்