கேபிள்டிவி ஆப்ரேட்டர்கள் நலச்சஙகத்தின் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பெருமிதம்.

கேபிள்டிவி ஆப்ரேட்டர்கள் நலச்சஙகத்தின் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பெருமிதம்.

கோவை மாவட்ட கேபிள்டிவி ஆப்ரேட்டர்கள் நல சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த தகவலறிந்ததும் அங்கு வாக்கு சேகரித்து வந்த மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அவர்களும் தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் தஞ்சை ஜோ.ஜீவா அவர்களும் தமிழக கேபிள்டிவி ஆப்ரேட்டர்களுக்கு என்றும் இந்த அரசு அரணாக இருக்கும் என்றும், கேபிள் டிவி ஆபரேட்டர்களின் வயர்கள் கேபிள் ஆப்பரேட்டர்களின் உடம்பின் நரம்புகள் போன்றவை அது என்றும் பாதுகாக்கப்படும் எனவும் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு டி.ஆர்.பி ராஜா அவர்கள் பெருமிதம்.

கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு TACTV H.D செட்டாப் பாக்ஸ் விரைவில் மாண்புமிகு தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் திரு பழனிவேல் தியாகராஜன் அவர்களால் விரைவில் வழங்கப்படும் என்றும் தரமான சிக்னல் வழங்க அனைத்து பணிகளையும் செய்துள்ளோம் OTT ,IPTV இந்தியா முழுவதும் TACTV மூலமாக வழங்கும் அளவிற்கு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இணையாக பல வசதிகளுடன் ஆப்ரேட்டர்களுக்கு அதிக வருவாய் கிடைப்பதற்கான வழிகளை செய்து வருகிறோம் எனவும் மாண்புமிகு தமிழக முதலமை‌ச்சர் அவர்கள் கேபிள்டிவி தொழிலாளர்கள் நலவாரியத்தை ஆப்பரேட்டர்களும் பயன்பெறும் வகையில் அறிவித்தமைக்கு நன்றிகளையும்
தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் தஞ்சை ஜோ.ஜீவா அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தினை சிறப்பாக ஏற்பாடு நலவாரியத்தின் உறுப்பினர்  வி.பாலாஜி சிறப்பாக செய்து இருந்தார். திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் இணை செயலாளர் டாக்டர் மகேந்திரன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்