‘கொடைக்கானலில்’ பற்றி எரியும் காட்டுத்தீ. தீயை அணைக்க வனத்துறை கடும் முயற்ச்சி.
‘கொடைக்கானலில்’ பற்றி எரியும் காட்டுத்தீ. தீயை அணைக்க வனத்துறை கடும் முயற்ச்சி.

கோடை வெயில் மலைப்பகுதியில் தகிக்கும் நிலையில், வனப்பகுதியில் உள்ள புல் உள்ளிட்ட தாவரங்கள் காய்ந்த நிலையில் உள்ளன.
சில தினங்களாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், பூம்பாறை வனப்பகுதியான பாரிகோம்பை, வெம்படி, சந்தனப்பாறை, மாணிக்கம் குடை தொட்டி உள்ளிட்ட இடங்களில் தீ பற்றி எரிந்தது. இங்குள்ள மரங்கள், வனவிலங்குகள் காட்டு தீயால் பாதித்தன.
இதனிடையே தற்போது பூம்பாறை மன்னவனுார் மெயின் ரோட்டில், கூக்கால் பிரிவு இடையே காட்டுத்தீ கொழுந்து விட்டு எரிகிறது. இதன் மத்தியில், பஸ், வேன், கார் உள்ளிட்ட வாகனங்கள் ஆபத்தாக சென்று வருகின்றன.

வனத்துறை தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டும் பலனில்லை. நுாற்றுக்கணக்கான ஏக்கர் வன நிலங்கள் எரிந்து சுற்றுச்சூழலும் பாதித்துள்ளது. தீயால் வன விலங்குகள் பட்டா நிலங்களில் தஞ்சமடைவதால் மனித, வனவிலங்கு மோதல் ஏற்படுகிறது. வனத்துறை அதிகாரிகள் என்ன செய்ய போகிறார்கள்.