அதிமுக எம்.எல்.ஏ மகேந்திரன் தோட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் வெட்டிக்கொலை முதல்வர் 1 கோடி நிதி உதவி.
அதிமுக எம்.எல்.ஏ மகேந்திரன் தோட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் வெட்டிக்கொலை முதல்வர் 1 கோடி நிதி உதவி.
திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம், குடிமங்கலம் மூங்கில் தொழுவில் அதிமுக மடத்துக்குளம் எம்.எல்.ஏ மகேந்திரன் தோட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் வெட்டி படுகொலை. மகேந்திரன் அவர்களின் தோட்டத்தில் பணிபுரியும் அப்பா, மகன் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்பொழுது மகன் தந்தையை அருவாளல் வெட்டியதை நேரில் பார்த்த மருமகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில் அதை விசாரிக்க வந்த எஸ்.ஐ சண்முகவேலை துரத்தி துரத்தி குடிபோதையில் வெட்டிக்கொன்ற மகன்.
அப்பா மகன் இருவரும் தலைமறைவான நிலையில் 5 தனிப்படை வைத்து காவல்துறையினர் அவரைத் தேடி வருகின்றனர். இறந்து போன எஸ்.ஐ குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இச்சம்பவம் உடுமலை மட்டுமின்றி தமிழ்நாடு அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது