மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரிபவர் உதவியுடன் போலிபட்டா. மதுரை கலெக்டர் அலுவலத்தில் பாதிக்கப்பட்டவர் பரபரப்பு புகார்.

மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரிபவர் உதவியுடன் போலிபட்டா. மதுரை கலெக்டர் அலுவலத்தில் பாதிக்கப்பட்டவர் பரபரப்பு புகார்.

மதுரை வண்டியூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த பரசுராமன் என்பவரது மகன் P.வசந்தகுமார் (எ) கருப்புசாமி என்பவர் நேற்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து உள்ளார் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மதுரை கிழக்கு வட்டம், வண்டியூர் II-பிட் கிராமத்தில் எனது தந்தையின் தந்தை சீ.க.சொக்கணாண்டி அம்பலம் அவர்களால் கிரையம் பெற்று, குடும்ப பாக பரிவினையின் படி எனது குடும்பத்திற்கு பாத்தியப்பட்டு எங்கள் பெயர்களில் பட்டா ஏற்பட்டு சர்வே எண் :111/6E1-ல் கட்டுப்பட்ட 40 செண்ட் நிலத்தில் கீழ்புரம் 20 செணட் நிலத்தில் எனது தாயார் P.மணிமேகலை கிரைய ஆவண எண் : 951/1999 மூலம் V.V.ராஜன் என்பவருக்கு 600 சதுரடி அடி நிலம் விற்பனை செய்தும், மேலும் எனது தாயார் P.மணிமேகலை எனது சகோதரி மீனாம்பிகை இருவரும் சேர்ந்து எழுதிய ஆவண எண் :1973/1999-ல் மூலம் வண்டியூர் பங்குனி உத்திர திருவிழா சங்கத்தினருக்கு 774-சதுரடியுள்ள காலி மணையினை கிரையம் செய்து கொடுத்துள்ளனர். மேலே கண்ட ஆவணங்களின் பரிவர்த்தனை விபரங்களை மறைத்து எவ்வித ஆவணங்களும் இன்றி UDR கணக்குகளில் 111/6E1B- என திருத்தம் செய்து போலியாக ராஜம் என்பவரின் பெயரில் பட்டா மாற்றப்பட்டுள்ளது. அதற்கு பிறகு தற்போது மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் நல்லமணி (எ) சதீஸ் குடும்பத்தினரால் மேற்படி UDR தவறாக ஏற்பட்ட பட்டாவை பயன்படுத்தி பத்திரம் பதிவு செய்து எங்கள் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்து வருகின்றனர்.
மேற்படி UDR-ல் ஏற்பட்ட பட்டாவை ரத்து செய்ய கோரி கடந்த 2013-ம் ஆண்டு மனு செய்ததின் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் அவர்களின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதோடு (RTI ACT- ல் தரப்பட்ட அறிக்கை நகல் இணைக்கப்பட்டுள்ளது) விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதன் பிறகு நான் பலமுறை மனு செய்தும் (மனுவின் நகல்கள் இணைக்கப்பட்டுள்ளது) எனது மனுக்களின் மீது எவ்வித விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே UDR -ல் ஏற்பட்ட பட்டாவை ரத்து செய்து எங்கள் பெயரில் பட்டா வழங்குமாறும், போலி ஆவணங்கள் பதிவு செய்துள்ள நல்லமணி (எ) சதீஸ் குடும்பத்தினர் மற்றும் தேவானந்த் ஆகியோர் மீது உரிய சட்டநடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

கலெக்டர் மனு காப்பிகளை மதுரை மாவட்ட வருவாய் அலுவலர்,வருவாய் கோட்ட கோட்டாட்சியர்,நில அளவை உதவி இயக்குனர்,மதுரை கிழக்கு வட்ட வட்டாட்சியர் அனைவரிடம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்