*உ.பி.யில் லாரி மீது பேருந்து மோதி விபத்து- 18 பேர் பலி*

*உ.பி.யில் லாரி மீது பேருந்து மோதி விபத்து- 18 பேர் பலி*

லக்னோ:உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் இன்று அதிகாலையில் டபுள் டக்கர் பேருந்து ஒன்று பால் கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.

லக்னோ- ஆக்ரா விரைவுச் சாலையில் பீகாரில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த டபுள் டக்கர் பேருந்து, பால் கண்டெய்னர் லாரி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது.

முதற்கட்ட தகவலின்படி, விபத்தில் 18 பேர் இறந்திருக்கலாம் என்றும் 19 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத், மீட்பு பணிக்காக உயர் அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்