கோவில்பட்டி அருகே இளைஞர் வெட்டி கொலை – முன் விரோதம் காரணமா ? போலீசார் விசாரணை..

கோவில்பட்டி அருகே இளைஞர் வெட்டி கொலை – முன் விரோதம் காரணமா ? போலீசார் விசாரணை..

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் கனகராஜ் மகன் அருண்பாரதி (20). இவர் இன்று மதியம் அங்குள்ள 18ம் படி கருப்பசாமி கோவில் கண்மாய் அருகே பைக்கில் சென்று கொண்ருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அவரை வழிமறித்து, சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டுச் தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இனாம்மணியாச்சியைச் சேர்ந்த ஸ்ரீதீபன் என்பவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அரிவாளால் வெட்டப்பட்டார். இந்த வழக்கில் அருண் பாரதி 3வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளி வந்த நிலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்