இந்திரா காந்தி பிறந்தநாளையொட்டி இளைஞர் காங்கிரஸ் சார்பில் தூய்மைப் பணியாளர்கள் கவுரவிப்பு

இந்திரா காந்தி பிறந்தநாளையொட்டி இளைஞர் காங்கிரஸ் சார்பில் தூய்மைப் பணியாளர்கள் கவுரவிப்பு.

மாநிலத் தலைவர் விச்சு என்கிற லெனின் பிரசாத் தலைமையில் நடந்தது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி திருச்சி காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் நடந்தது. தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் தலைமை தங்கினார்.

இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் அபுதாகிர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் வழக்கறிஞர் சரவணன், இளைஞர் காங்கிரஸ் சரவணன் சுப சோமு, திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கவுன்சிலர் எல்.ரெக்ஸ் ,திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் திருச்சி கலை,சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் இன்ஜினியர் பேட்ரிக் ராஜ்குமார், தெற்கு மாவட்டம் இன்ஜினியர் அலங்காரம் ,திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் சோபியாவிமலா ராணி, மாவட்ட பொதுச் செயலாளர் ஜி.எம்.ஜி மகேந்திரன்,திருச்சி மாநகர் மாவட்ட துணைத் தலைவர் சக்கரபாணி, திருச்சி மாவட்ட சிறுபான்மை பிரிவு பஜார் மொய்தீன், திருச்சி கிழக்கு சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் அப்துல் காதர், செயலாளர் பைசில், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்