ஜி கார்னர் மைதானத்தில் பிணமாக கிடந்த பெண். உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை.

ஜி கார்னர் மைதானத்தில் பிணமாக கிடந்த பெண். உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை.

திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் இன்று காலை அப்பகுதி பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொண்டு வந்தனர். அப்போது ஒரு பெண் படுத்த நிலையில் கிடந்திருந்தார். இதைப் பார்த்த நடை பயிற்சியாளர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் பொன்மலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெண்ணின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து அந்தப் பெண் யார் ?எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்