அதிகாரிகளின் ஆசியோடு கோடிக்கணக்கில்“கிராவல் மண் கொள்ளை. போராட்டத்துக்கு தயாராகும் விவசாயிகள்.

அதிகாரிகளின் ஆசியோடு கோடிக்கணக்கில்“கிராவல் மண் கொள்ளை. போராட்டத்துக்கு தயாராகும் விவசாயிகள்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தாலுகா மாராத்தூரில் கிராவல் மண் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த பெர்மிட்டை வைத்து எந்தவித மேல் அனுமதியும் பெறாமல், மானாமதுரை தாலுகா வேதியனேந்தல் ஏரியாவில் இரண்டு மாத காலமாக கிராவல் மண்ணை கொள்ளை பெரும் அளவில் நடந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் நீர் ஆதாரம் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுவதோடு போராட்டத்துக்கும் தயாராகி வருகிறார்கள். இந்த போலி பர்மிட்டில் கிராவல் மணல் அள்ளும் சிங்காரமான மானாமதுரை பிரமுகருக்கு சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கனிமவள அதிகாரிகள், போலிஸார், வருவாய்துறை அதிகாரிகள் பக்க பலமாக இருப்பதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்காவிட்டால் பொது மக்களும் போராட்டத்துக்கு தயாராகி வருவதாக தகவல்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்