இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

திருச்சி மாநகரில் சனிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், சிறுவயலூா் பகுதியைச் சோ்ந்தவா் மனோகரன் மகன் கோபிநாத் (20). இவா், திருச்சி – சென்னை புறவழிச்சாலையில் சனிக்கிழமை நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். ரயில்வே பாலம் அருகே வேகமாக சென்றபோது, முன்னால் சென்ற காந்தி மாா்க்கெட் தையல்கார வீதியைச் சோ்ந்த க. முருகேசன் (59) என்பவரது இருசக்கர வாகனத்தின்மீது கோபிநாத்தின் இருசக்கர வாகனம் மோதியது.

  இதில், இருவரும் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளனா். அப்போது, அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் கோபிநாத்தின் தலையில் ஏறியது. இதில், சம்பவ இடத்திலேயே கோபிநாத் உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருச்சி தெற்கு போக்குரவத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் கோபிநாத்தின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், கீழே விழுந்ததில் காயமடைந்த முருகேசனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்