திருச்சி தெற்கு மாவட்டதிமுக சார்பில் பொங்கல் விழா, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு.
திருச்சி தெற்கு மாவட்டதிமுக சார்பில் பொங்கல் விழா, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு.
தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும்,அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் கழக நிர்வாகிகள் புடைசூழ புதுப் பானையில் பொங்கலிட்டுபொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

தமிழ் புத்தாண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு மாவட்ட கழக அலுவலகம் வண்ண பொடிகளால் கோலமிடப்பட்டு கரும்பு மற்றும் மாவிலை தோரணங்களால் அலுவலகம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் மாநகர கழக செயலாளர் மதிவாணன் மற்றும் மாவட்ட மாநகர பகுதி ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.