திருச்சி மாநகர்மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

திருச்சி மாநகர்மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அக்டோபர் 2-ந் தேதி மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டிற்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள விடுதியில் திருச்சி மாநகர மேற்கு மாவட்ட பகுதியில் சார்பில் மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ் தலைமையில் நடைபெற்றது

இக்கூட்டத்தில் மேலிட பொறுப்பாளர்கள்,
அமைப்புச் செயலாளர் திருமார்பன், தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணைச் செயலாளரும்,திருச்சி மாமன்ற உறுப்பினருமான ந.பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடைபெற உள்ள மகளிர் மாநாட்டில் மேற்கு மாவட்டத்தின் சார்பில் திரளாக கலந்து கொள்வது,
மாநாட்டிற்கு திரளாக பெண்களை அழைத்துச் செல்வது, மாநாடு குறித்து கைப்பிரதி மூலமாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த கூட்டத்தில.அரசு அய்க்கிய பேரவையின் மாவட்ட செயலாளர் அண்ணாதுரை, நிர்வாகிகள் விடுதலை, தில்லை சரவணன், வழக்கறிஞர் ரகுநாத், தென்னூர் ரஹிம், சிறுத்தைசதீஷ், முத்துக்குமார்,
சந்திரமோகன், அஸ்வின், தினேஷ், காந்தி, , காஜாமலை பகுதி செயலாளர் கலியன், மகளிர் அணி நிர்வாகி சுதா மற்றும் நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்