குற்றவியல் புதிய சட்டங்களுக்கு எதிராக திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டம்.
குற்றவியல் புதிய சட்டங்களுக்கு எதிராக திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டம்.
100 -க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு.
மத்தியய பாஜக அரசு கடந்த ஆண்டு 140 எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்து விட்டு, எந்த விவாதங்களுமின்றி மூன்று குற்றவியல் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.
பாரதீய நியாய சன்ஹிதா, பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதீய சாக்ஷ்ய ஆதினியம் என்று சமஸ்கிரதத்தில் பெயரிடப்பட்ட அந்த சட்டங்கள் நேற்று ( ஜூலை 1 ஆம் தேதி) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இச்சட்டங்கள் ஜனநாயக உரிமைகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துபவர்களை நசுக்குவதாகவுள்ளது. அதானி, அம்பானி போன்ற முதலாளிகளுக்கு நாட்டின் செல்வங்களை ஒப்படைப்பதற்கு ஏதுவாகவும், அதற்கு எதிராக போராடுபவர்களை நசுக்குவதற்காகவும் இத்தகைய சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டிவருகின்றனர்.
மேலும் இச்சட்டடங்கள், மக்களாட்சியின் மாண்பையும், மனித உரிமைகளையும் பறிக்கும் விதமாகவும், நீதித்துறையின் அதிகாரங்களை பறிக்கும் விதமாகவும், அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாகவும் உள்ளது. மக்கள்விரோத இச்சட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது. தற்போதுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்பாக இச்சடங்களை விவாகத்திற்கு கொண்டுவரவேண்டும். இதனை வலியுறுத்தி நேற்று உண்ணாவிரதப் போராட்டம். இன்று ஆர்ப்பாட்டம். நாளை மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம். வரும் 8ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவில் வழக்கறிஞர்கள் ஒன்று சேர்ந்து திருச்சியில் பிரம்மாண்ட பேரணி நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்று வழக்கறிஞர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மூன்று சட்டங்களும் மத்திய பாஜக அரசின் பாசிச கொள்கையை நடைமுறைப்படுத்தும் விதமாகவும், பிரிட்டீஷ் காலணியாதிக்கத்தை மீண்டும் அமல்படுத்தும் விதமாகவும் உள்ளது. எனவே இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது. அவற்றை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் முழக்கம் எழுப்பப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன், ஜாக் செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளர் சுகுமார், துணைத்தலைவர் மதியழகன், இணைச் செயலாளர்கள் சந்தோஷ் குமார், அப்துல்கலாம்,பார் கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திர குமார், செயற்குழு உறுப்பினர்கள் சுதர்சன், முத்துமாரி, தினேஷ், சரவணன், மூத்த வக்கீல்கள் வீரமணி, முத்துகிருஷ்ணன், ஓம் பிரகாஷ், குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் முல்லை சுரேஷ், குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் பி.வி.வெங்கட். துணைத் தலைவர்கள் சசிகுமார், பிரபு, செயற்குழு உறுப்பினர் பொன் முருகேசன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.