துவங்கியது ஆறாம் சுற்று வடகிழக்கு பருவமழை!* வெதர்மேன் எச்சரிக்கை.

துவங்கியது ஆறாம் சுற்று வடகிழக்கு பருவமழை!* வெதர்மேன் எச்சரிக்கை.

==> ராஸ்பி அலைவு கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிக்கு வருகை தந்துள்ளது. மேடன் ஜூலியன் அலைவு அடுத்த சில தினங்களில் மேற்கு இந்திய பெருங்கடல் பகுதிக்கு வருகை தரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

==> சுமத்ரா பகுதியில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இது மேற்கு நோக்கி நகர்ந்து டிசம் 28ம் தேதி வாக்கில் குமரிக்கடல் பகுதிக்கு வருகை தரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

*துவங்கியது ஆறாம் சுற்று மழை!*

==> ஈரப்பதமிகுந்த கீழ்திசை காற்றின் காரணமாக *#மயிலாடுதுறை #நாகப்பட்டினம் #காரைக்கால் #புதுக்கோட்டை* மாவட்ட கடலோரத்தில் லேசான/மிதமான மழை துவங்கியுள்ளது.

*இன்று (24.12.2023) முதல் (28.12.2023) வரை:*
==> மத்திய கடலோர மாவட்டங்களான *#மயிலாடுதுறை #காரைக்கால் #நாகப்பட்டிணம் #திருவாரூர் #தஞ்சாவூர்* போன்ற மாவட்டங்களில் தினசரி மிதமானது முதல் சற்றே கனமழையும், கடலோரத்தின் ஒருசில இடங்களில் கனமழையும் பதிவாகும்.

==> பிற கடலோர மாவட்டங்களான *#சென்னை #திருவள்ளூர் #காஞ்சிபுரம் #செங்கல்பட்டு #புதுச்சேரி #கடலூர் #இராமநாதபுரம் #தூத்துக்குடி #கன்னியாகுமரி* மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும்.

==> உள் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் போன்ற உட்புற தமிழகத்தில் தற்போது மழை வாய்ப்பு குறைவு. ஒரிரு இடங்களில் லேசான/மிதமான மழை பதிவாகலாம்.

*தீவிரமடையும் ஆறாம் சுற்று மழை!*

==> குமரிக்கடல் நோக்கி நகரும் காற்று சுழற்சி & ஈரப்பதமான காற்று குவிதல் காரணமாக டிசம் 29,30,31 ஆகிய தேதிகளில் ஆறாம் சுற்று மழை தீவிரமடைய கூடும்.

*(29.12.2023) முதல் (31.12.2023) வரை:*

==> தென்மாவட்டங்கள் & டெல்டா மாவட்டங்களான *#கன்னியாகுமரி #திருநெல்வேலி #தூத்துக்குடி #இராமநாதபுரம் #தஞ்சாவூர் #நாகப்பட்டிணம் #காரைக்கால் #மயிலாடுதுறை* மாவட்டங்களில் பரவலாக கனமழை பதிவாகும்.

==> *#கன்னியாகுமரி #திருநெல்வேலி #தென்காசி #தேனி #விருதுநகர் #கோயம்புத்தூர்* போன்ற மாவட்டங்களின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஒருசில இடங்களில் மிககனமழை முதல் அதிகனமழை வரை பதிவாகும்.

==> குறிப்பாக *#மாஞ்சோலை #ஊத்து #நாலுமுக்கு #மணிமுத்தாறு #பாபநாசம்* போன்ற நீர் பிடிப்பு பகுதிகளில் டிசம்பர் 29,30 தேதிகளில் அதிகனமழை வாய்ப்பு உள்ளது.

டிசம்பர் 26 ம் தேதி மாலை எவ்வளவு மழை பதிவாகும் என்ற விபரங்கள் & முன்னெச்சரிக்கை குறித்து விரிவான விளக்க காணொளி பதிவிடுகிறேன்.

==> தென்மாவட்டங்களில் கடந்த சுற்று போல பெருமழை வாய்ப்பு இல்லை என்றாலும், தற்போதைய நிலையில் கன/மிககனமழை பதிவானாலே பாதிக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை என்பது தேவை.

*==> குற்றாலம், தேக்கடி, கழுகுமலை, சபரி மலை செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் டிசம் 29 முதல் ஜனவ 1 வரை உங்கள் பயணங்களை தள்ளி வைப்பது நல்லது.*

==> வங்ககடலில் புயல் உருவாக தற்போது ஏற்ற சூழல் இல்லை, அதேபோல டெல்டா & வடமாவட்டங்களில் அதித கனமழை/பெருமழைப்பொழிவு பதிவாக தற்போது வாய்ப்பு குறைவு.

==> சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் வளிமண்டல மத்திய அடுக்கின் மேற்கு & கீழ் அடுக்கின் கிழக்கு காற்று குவிதல் காரணமாக ஜனவரி முதல் வாரத்தில் பரவலாக கனமழையும், ஒருசில இடங்களில் அதித கனமழையும் ஏற்படும்.

==> டெல்டாவில் மேகமூட்டம் ,மிதமான/ சாரல் மழை பூச்சி பாதிப்பை வரும் நாட்களில் அதிகப்படுத்தும். அறுவடைக்கு தயாராக இருக்கும் பயிர்களுக்கும் வரும் கால மழை பாதிப்பை ஏற்படுத்தகூடும்.

==> ஜனவ 7, 2023 ஆம் தேதி முதல் படிப்படியாக வடகிழக்கு பருவமழை தமிழகத்தை விட்டு விலகும்.

வானிலை மாற்றங்களை அறிந்து தொடர்ந்து முன்னெச்சரிக்கையுடன் இருக்க தினசரி அறிக்கைகளை பார்த்து பயன்பெறுங்கள். என்று வெதர்மேன் ஹேமச்சந்தர்* பதிவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்