சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே 4 மாத ஆண் குழந்தையைக் கொலை செய்து புதைத்த வழக்கில் தாய், தந்தை, பாட்டி ஆகியோரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே 4 மாத ஆண் குழந்தையைக் கொலை செய்து புதைத்த வழக்கில் தாய், தந்தை, பாட்டி ஆகியோரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

திருப்பாச்சேத்தி அருகேயுள்ள நாட்டாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரர்.  இவா் கோவையில் தேநீா்க் கடையில் வேலை பார்த்த போது, ஷாலினி(26) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பின்னர், இந்தத் தம்பதி சிவகங்கைக்கு வந்தனர். அங்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஷாலினிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில், சிவகங்கையிலிருந்து கடந்த 20 ஆம் தேதி வீட்டைக் காலி செய்து விட்டு நாட்டாகுடி கிராமத்துக்குச் சென்ற சந்திரசேகருக்கு குழந்தையின் பிறப்பில் சந்தேகம் ஏற்பட்டது.

இது தொடா்பாக கடந்த 21-ஆம் தேதி தம்பதியரிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது இவா்கள் 4 மாதக் குழந்தை முனீஸ்வரனை மாறி, மாறி தூக்கி வீசினர். இதில் குழந்தை கீழே விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்தது. பின்னா் சந்திரசேகா், ஷாலினி, சந்திரசேகரின் தாய் காளிமுத்து ஆகிய மூவரும் சோ்ந்து நாட்டாகுடி கிராமத்தில் உள்ள கால்வாயில் யாருக்கும் தெரியாமல் குழந்தையின் உடலை புதைத்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், திருப்பாச்சேத்தி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து புதைக்கப்பட்ட குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து மருத்துவக் குழுவினரின் உதவியுடன் உடல் கூறாய்வு செய்தனர். இதைத்தொடா்ந்து, சந்திரசேகரை போலீஸார் கைது செய்தனர்

பின்னர், சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவீன்குமார் உமேஷ் டோங்கரே உத்தரவின் பேரில், மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளா் கண்ணன் மேற்பாா்வையில் திருப்பாச்சேத்தி காவல் ஆய்வாளா் சிவக்குமார் உதவி ஆய்வாளர் சிவசுப்பு தலைமைக் காவலர்கள்  கண்ணன், அருண் சோழன், கார்த்திக் ஆகியோர் கொண்ட தனிப்படை நாட்டாகுடி கிராமத்தில் பதுங்கியிருந்த ஷாலினி, காளிமுத்துவை திங்கள்கிழமை கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்