திருச்சியில் நடந்த தமிழ்நாடு மூத்த குடிமக்கள், பென்சனர்கள் உரிமை சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றம்.
திருச்சியில் நடந்த தமிழ்நாடு மூத்த குடிமக்கள், பென்சனர்கள் உரிமை சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றம்.
தமிழ்நாடு மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் உரிமை சங்கத்தின் 12-வது மாநில மாநாடு, செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் மாநிலத் தலைவர் டாக்டர் ஜெ.ராகவன் தலைமையில் நடந்தது.
ராஜா ஹோட்டல் உரிமையாளர் ஹாஜி டாக்டர் ஏ.கே.முஸ்தபா கமால் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக சங்க மாநில முதன்மை ஆலோசகர் டி.பி.சுப்பையா, மாநில பொருளாளர் கோவை ஏ.சுப்பிரமணியன், மாநில அமைப்பு செயலாளர் சென்னை கே.சுப்பிரமணியன், மாநில இணைச்செயலாளர் விருதுநகர் டி.சி.குமாரசாமி, மாநில துணைத்தலைவர் தூத்துக்குடி ஐ.எஸ் மாசிலாமணி, எஸ்.முத்துசாமி தாசில்தார் பணி ஓய்வு மாவட்ட தலைவர் திருநெல்வேலி, ஏ.சண்முகநாதன் துணை ஆட்சியர் திருச்சிராப்பள்ளி, டாக்டர் எஸ்.ஏ. செபாஸ்டியன் சங்க மாநில முதன்மை ஆலோசகர். பி அருள்ஜோன்ஸ் மாநில தலைவர் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர்கள் ஆசிரியர் சங்கம் திருச்சிராப்பள்ளி, டி சின்னதுரை தாசில்தார் பணி நிறைவு திருச்சி, கே சிவராமன் மாநிலத் துணைத் தலைவர் மதுரை, எஸ் பி ஜெயக்குமார் மாநிலத் துணைத் தலைவர் காஞ்சிபுரம், ஆர் சி வீரய்யன் மாநில இணைச் செயலாளர் தஞ்சாவூர், டி.சி.சாமிநாதன் திருச்சி மாவட்ட செயலாளர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவில் மாநில பொதுக்குழு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. விழாவில் திருச்சி ஜே.கே .சி .அறக்கட்டளை நிறுவனர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் வாழ்த்துரை வழங்கினார். முடிவில் மாநில துணைத்தலைவரும், திருச்சி மாவட்ட தலைவருமாகிய அல் ஹாஜி கே.எஸ்.அப்துல் அஜீஸ் நன்றி கூறினார்.