ரூபாய் 1.31 கோடி மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட இணைப்பு பாலம் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தனர்.
ரூபாய் 1.31 கோடி மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட இணைப்பு பாலம் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தனர்.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட திருவெறும்பூர் வார்டு எண் 39,40 ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் மூலதன மானிய நிதித்திட்டத்தின் கீழ் ரூபாய் 1.31 கோடி மதிப்பீட்டில் கவுறு வாய்க்காலில் புதிதாக கட்டப்பட்டுள்ள உயர்மட்ட இணைப்பு பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆகியோர் திறந்து வைத்தார்கள்.
இப்பாலமானது வார்டு எண் 39 மற்றும் 40 பாலாஜி நகரை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இப்பாலம் கட்டப்படவேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும். இதற்கு முன்பாக இப்பகுதியை கடக்க இயலாமல் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் கடந்து செல்லவேண்டி இருந்தது. எனவே இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று இப்பாலம் கட்டப்பட்டுள்ளது. இப்பாலம் அமைக்கப்பட்டதன் மூலம் இப்பகுதியில் வசிக்கும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிக்குழந்தைகள் பயனடைவார்கள்.
இந்நிகழ்வில், மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் மாநகராட்சி மேயர் அன்பழகன்,திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவர் மதிவாணன், மாநகராட்சி ஆணையர் வே.சரவணன், நகரப் பொறியாளர் சிவபாதம், மாமன்ற உறுப்பினர்கள் சிவக்குமார், எல்.ரெக்ஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.