வனங்களின் முக்கியத்துவம் அண்மை காலமாக உணரப்படுகிறது. திருச்சி வனச்சகர அலுவலர் பேச்சு.

வனங்களின் முக்கியத்துவம் அண்மை காலமாக உணரப்படுகிறது.

திருச்சி வனச்சகர அலுவலர் பேச்சு.

வனங்களின் முக்கியத்துவம் முன்பை விட அண்மைக்காலமாக உணரப்படுவது வரவேற்கத்தக்தது என்று வனச்சரக அலுவலர் டி. மேரிலென்ஸி கூறினார்.

உலக வன விலங்குகள் தின விழா,திருச்சி ஐமால் முகமது கல்லூரியில் தண்ணீர் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று வனச்சரக அலுவலர் டி. மேரிலென்ஸி பேசியதாவது :-
இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் வனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வனங்கள் தட்பவெப்ப நிலையை, சீராக வைப்பதுடன்,மழைபெய்ய வைக்கும் முக்கிய காரணியாகவும் உள்ளது. ஆறுகளின் பிறப்பிடமாகவும், ஆயிரக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரமாகவும் ஆபத்திலிருந்து பாதுகாக்கும் அலையாத்திக் காடுகளாகவும் வனங்கள் திகழ்கின்றன. பல்லுயிர் பெருக்கத்தின் புகலிடமாக விளங்கும் காடுகள் வனவிலங்குகளுக்கு உய்விடமாகவும், அரிய வகை மூலிகைகளுக்கு உறைவிடமாகவும், மலைவாழ் மக்களுக்கு அரணாகவும் விளங்குகின்றன. மண் அரிமானத்தை தடுத்து வேளாண்மையின் வளர்ப்புத் தாயாகவும் காடுகள் விளங்குகின்றன. நச்சு வாயுக்களின் தாக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் குறைந்து, வேளாண்மை உற்பத்தி திறன், தண்ணீர் பற்றாக்குறை மற்றும் அதிகரித்து வரும் வாயு மாசுக்கள் உள்ளிட்டவைகளால் வனங்களின் முக்கியத்துவம் முன்பை விட அண்மைக்காலமாக உணரப்படுவது வரவேற்கத்தக்தது என்றார்.

தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி. நீலமேகம் தலைமை வகித்தார். தண்ணீர் சுற்றுச்சூழல் மன்றம் மாணவர் ஓருங்கிணைப்பாளர் முனைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். திருச்சி வனச்சரக அலுவலர் ஏ.மகேஸ்வரன், மணப்பாறை வனச்சரக அலுவலர் மேரி லென்ஸி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுப்பேசினர். தண்ணீர் சுற்றுச்சூழல் மன்றம் மகளிர் ஓருங்கிணைப்பாளர் முனைவர் பி.தனலெட்சுமி வரவேற்றார். மாணவி அபிநந்தனா நன்றி கூறினார்

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்