திமுக வளர்ச்சிக்காக கோடி கோடியாய் செலவு பண்ணிய திமுக நிர்வாகி இன்று வறுமை நிலையில், சோகத்தை ஏற்படுத்தும் வைரல் பதிவு.

திமுக வளர்ச்சிக்காக கோடி கோடியாய் செலவு பண்ணிய திமுக நிர்வாகி இன்று வறுமை நிலையில், சோகத்தை ஏற்படுத்தும் வைரல் பதிவு.

சிவகங்கை திமுகவினர் மத்தியில் ஒரு பதிவு வைரலாகி சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த பதிவில்

  முன்னாள் திமுக சிவகங்கை மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருந்தவர் எஸ்.முரளி..இவரது பெயரை சிவகங்கை  மாவட்டத்துக்குள் தெரியாத கழக தொண்டர்களே இருக்கமுடியாது. கழகம் எதிர்கட்சியாக இருந்தபோது சிவகங்கை மாவட்டத்தில் அதிமுக ஆளுங்கட்சியா இல்லை திமுக ஆளுங்கட்சியா என்று அனைவரும் வியந்த அளவுக்கு தனது சுயநலமில்லாத உழைப்பால்  கழகத்தை உயரத்தில் வைத்திருந்தவர்.

கழகத்திற்காக தனது சொந்த பணத்தை கொட்டி அன்றைக்கு கழகத்தை உயர்த்திக்காட்டியவர்.

இவரால் கழகத்தில் பலபேர் பல பலன்களை அடைந்தார்கள் என்பது கழகத்தவர்கள் அனைவருக்குமே தெரியும். இன்றைக்கு தற்போது பதவிகளில் உள்ளவர்கள் யாராவது தனது சொந்த பணத்தை கழகத்திற்காக இவரைப்போல செலவு செய்திருக்கிறார்களா? இல்லையே..!

சிவகெங்கை மாவட்ட கழக செயலாளர் மரியாதைக்குறிய அண்ணன் கேஆர்.பெரியகருப்பன் அவர்களின் நம்பிக்கைகுறியவராக தனது பதவிவகித்த காலத்தில் கழக பணியாற்றியவர். கழக வளர்ச்சிக்காக இவர் பதவி வகித்த காலத்தில் தனது சொந்த பணம்  பத்து கோடிகளை தாராளமாக செலவு செய்தவர்..

இன்றைக்கும் கழக கரை வேஷ்டியோடும் தனது சட்டைபையில் தலைவர் மற்றும் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் கேஆர்.பெரியகருப்பன் அவர்களது படத்தை வைத்துக்கொண்டுதான் வெளியே வருகிறார். அன்றைக்கு இருந்த அதே கழக உணர்வுடன் இன்றைக்கும் நம்பிக்கையோடு உள்ளார்..

ஆனால் இன்றைக்கு அவர் நிலைமை மிகவும் மோசமானது..

தனது இரண்டு சிறுவயது மகன்களை வைத்துக்கொண்டு மிகவும் சிரமமான நிலையில் உள்ளார். தற்போது அவரது  உடல்நிலை மிகவும்  சரியில்லை கண்கள் இரண்டும் சரியாக தெரியவில்லை..

வாழ்வாதாரத்துக்கே மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்..

கழகத்துக்காக தனது சொந்த பணத்தை செலவு செய்தவர் இன்றைக்கு தான் வசிக்க சொந்தவீடுகூட இல்லாமல்  வாடகைவீட்டில் குடியிருந்து வருகிறார்..

 இன்றைக்கு கழகத்தில் இருப்பவர்கள்போல அந்த பத்து கோடியை வைத்து சொந்தமாக வீடுகட்ட அவர் அன்றைக்கு  எண்ணவில்லையே..

அன்றைக்கு கழகம் எதிர் கட்சியாக இருந்த போது கழகத்திற்காக தன் உழைப்பை மட்டுமல்ல பணத்தையும் செலவு செய்து கழகத்தை  உயர்த்திய   அவர் இன்று வீழ்ந்து கிடக்கும்போது அவருக்கு கழகம் உதவி செய்து தூக்கிவிடுவதுதானே நியாயம்..

இந்த பதிவின் மூலம் சிவகங்கை திமுக மாவட்ட கழக செயலாளர் மரியாதைக்குறிய அண்ணன் கேஆர்.பெரியகருப்பன் அவர்கள்  தற்போது உள்ள  திரு முரளி அவர்களின்  ஏழ்மை நிலை மற்றும் உடல்நிலையை கவனத்தில் கொண்டு இவருக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் சரியான நிவாணத்தை வழங்கி இவரது கழக உழைப்பிற்கான ஒரு மரியாதை கிடைக்க   உதவிகள் செய்யவேண்டுகிறேன்..

மாற்று இயக்கத்தை சேர்ந்தவர்களை எல்லாம் உடல்நிலை சரியில்லாமல் இருப்பவர்களை  கழகத்தலைவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவருகிறார்..

அப்படிபட்ட சூழலில் கழகத்திற்காக எல்லாவற்றையும் இழந்து இன்றைக்கு நிற்கதியாக நிற்கும் முன்னாள் சிவகங்கை மாவட்ட திமுக இளைஞரணி செயலாளர் திரு எஸ்.முரளி அவர்களையும் மனிதாபிமான முறையில் மாவட்ட கழக செயலாளர் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல்கூறி தங்களால் ஆன நிதி உதவியை அளித்து அவருக்கு பெருமை சேர்க்கவேண்டும்.

இந்த பதிவை குள சொக்கு என்பவர் தன் முகநூல் பக்கத்தில் பதிந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்