திருச்சி கருமண்டபத்தில் தமிழக அரசு நூலக துறை Probably பகுதிநேர நூலக திறப்பு விழா.
திருச்சி கருமண்டபத்தில் தமிழக அரசு நூலக துறை Probably பகுதிநேர நூலக திறப்பு விழா.
மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் பங்கேற்பு.
திருச்சி மாநகராட்சி கருமண்டபத்தில் தமிழக அரசு நூலக துறை சார்பில் பகுதிநேர நூலக திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு கவுன்சிலர் மஞ்சுளா தேவி தலைமை வகித்தார். பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். சமூக ஆர்வலர் முகமது அலி பகுதிநேர நூலகத்தை திறந்து வைத்தார்.
விழாவில்
பாரதிதாசன் பல்கலைக்கழக துணை பதிவாளர் (ஓய்வு) வெங்கடேசன், எழுத்தாளர் சீதா ஆகியோர் தலா ரூ 1000 த்தை
திருச்சி மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமாரிடம் கொடுத்து தங்களை நூலக புரவலராக இணைத்துக் கொண்டனர். விழாவில் மைய நூலக அலுவலர் தனலட்சுமி, நூலகர் தனபால், கவிஞர்கள் நந்தலாலா, இமானுவேல், வங்கி அதிகாரி மீனாட்சி நூலக பேராசிரியர் (ஓய்வு) மார்ட்டின் ஆரோக்கியராஜ், மீனாட்சி சுந்தரம், அறிவழகன் மற்றும் நல சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.