சிறுமி பாலியல் படுகொலை தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய் இரங்கல்.
சிறுமி பாலியல் படுகொலை. தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய் இரங்கல்.
“புதுச்சேரி, மாநிலம் முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற வைக்கிறது;
பெற்ற மகளை இழந்து, பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்குக் கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்;
சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்த கொலையாளிகளுக்குச் சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர, புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்”
தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய் இரங்கல்