தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர்கள் சங்க கூட்டம்தீர்மானங்கள் நிறைவேற்றம்.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர்கள் சங்க கூட்டம்தீர்மானங்கள் நிறைவேற்றம்.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர்கள் (சாலை ஆய்வாளர்கள்) சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடந்தது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் குருசாமி சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சீரமைப்பில் ஆர். ஐ உள்ளிட்ட பணியிடங்களை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும். இன்றைய சாலை நீளத்திற்கு ஏற்ப ஆர்.ஐ. பணியிடங்களை அதிகரிக்க வேண்டும். ஐ.டி.ஐ கல்வித் தகுதி உள்ள சாலை ஆய்வாளர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் பணி அனுபவத்தின் அடிப்படையில் ஓவர்சீஸ் பதவி உயர்வு வழங்கியது போல் நெடுஞ்சாலை துறையிலும் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களில் இருந்து சாலை ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு 41 மாத பணி நீக்க காலத்தை தற்போது வழங்கிய நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கௌரவ பொதுச் செயலாளர் மாரிமுத்து நிறைவுறையாற்றினார்.
கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் சாலமன், வில்லியம் அந்தோணி, சுந்தரவல்லி மற்றும் கோட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாநில செயலாளர் ஜெகதீசன் நன்றி கூறினார்.