திருவரங்கத்தில் பரிதாபம்: அங்கன்வாடி ஆசிரியை தூக்கு போட்டு தற்கொலை.

திருவரங்கத்தில் பரிதாபம்: அங்கன்வாடி ஆசிரியை தூக்கு போட்டு தற்கொலை.

உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை.

திருவரங்கம் சாத்தார வீதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 48) .இவர் அங்கன்வாடி ஆசிரியை.இவரது கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகள் கீர்த்தனாவும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் ஆசிரியர் கிருஷ்ணவேணி மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் விரக்தியில் இருந்த ஆசிரியை கிருஷ்ணவேணி வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது சகோதரர் வாசுதேவன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்